

அறிமுகம்
AWS re/start திட்டம் எனப்படுவது தனிநபர்களை cloud இல் தொழிற்துறைகளுக்காக தயார்படுத்தி cloud இன் ஆரம்ப-மட்ட பதவிகளுக்காக சாத்தியமான தொழில் வழங்குநர்களுடன் இணைக்கும் ஒரு முழுநேர வகுப்பறையை மையப்படுத்திய திறன் விருத்தி மற்றும் பயிற்சித் திட்டமாகும்.
காட்சி அடிப்படையிலான கற்றல் மற்றும் செயல்சார் ஆய்வுகூடங்கள் ஆகியவற்றின் மூலமாக ஆரம்ப-மட்ட cloud வகிபாகங்களுக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன்களை கற்பவர்கள் பெறுகிறார்கள். பொருந்தக்கூடிய தொடர்பாடல் நேர முகாமைத்துவம் மற்றும் கூட்டுமுயற்சி போன்ற தொழில்முறைத் திறன்களை விருத்தி செய்வதிலும் AWS re/Start கவனம் செலுத்துகிறது. 12 வார பயிற்சிக்குப் பின்னர் AWS re/Start திட்டத்தின் பட்டதாரிகளை சாத்தியமான தொழில் வழங்குநர்களுடன் கூட்டு நிறுவனங்கள் இணைக்கின்றன.
12 வார கற்றல் பயணத்தின் பின்னர் நிலைத்து நிற்கும் பயன்கள்

ஒரு டிஜிட்டல் சின்னத்துடன் AWS certification

Cloud ஐ மையப்படுத்திய தொழில்களுக்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் மென் திறன்கள்

தொழிற்துறை மட்ட தொழில் வழங்குநர்களிடமிருந்து வேலை வாய்ப்புக்கள்
திட்ட விளக்கக் குறிப்பு
ஆரம்ப-மட்ட Cloud திறன்களுடன் உள்ள பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய தொகுதியை நிறுவுதல்.

AWS re/Start ஏன்?
தனிநபர்களுக்கு அவர்களுடைய திறன்களை மேம்படுத்துவதற்கும் அவர்களுடைய தொழிற்துறையில் மேலும் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் இந்த திட்டம் உதவுகிறது. IT துறையானது உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையானது, எதிர்காலத்தின் சிறந்த மேம்பாட்டுக்காக அறிவைப் பெற்றுக்கொள்வதையும் அவர்களுடைய IT திறன்களை விருத்தியடையச் செய்வதையும் ஒவ்வொரு தனிநபருக்கும் இது கட்டயமாக்கியுள்ளது. ஆர்வமாகக் கற்பவர்கள் மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி எம்முடன் இப்போதே பதிவு செய்துகொள்ளுங்கள்!
இலக்கு வைக்கப்பட்டுள்ள குழுவினர்

முழு நேரமாக வேலை தேடுபவர்கள்

Cloud திறனற்ற பட்டதாரிகள்

Start up வணிகங்களின் தொழில்முனைவோர்

தொழில்நுட்பம் சாராத சூழல்களில் இருந்து வரும் தனிநபர்கள்
குழு தொடர்பான விவரங்கள்
குழு 5
செப்டெம்பர் – நவம்பர்
காலை நேர அமர்வுகள்
குழு 6
செப்டெம்பர் – நவம்பர்
பிற்பகல் அமர்வுகள்
கற்றல் இலக்குகள்

பாடத்திட்டம்
இந்த திட்டமானது AWS இன் அடிப்படை சேவைகளை மையப்படுத்தி திறன்களை விருத்தி செய்வதற்கு தனிநபர்களுக்கு உதவுவதுடன் Cloud தொழில்நுட்ப வசதிகள் Cloud இனால் வழங்கப்படும் முக்கியமான தொழில்நுட்ப வசதிகள் (Computing, Storage, Networking, Security, மற்றும் Database) மற்றும் Programming கருத்தாக்கங்கள் ஆகியவற்றின் நன்மைகளாக Cloud கருத்தாக்கத்தின் அடித்தள அறிமுகத்தையும் உள்ளடக்குகிறது.